அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்

அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்
பிறப்பு : 19/07/2006
இறப்பு : 10/07/2013

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு
சந்தோசமாயிரு துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்  
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
- அல்றிக் சௌஜன்யன்-

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், கிளிநொச்சியைச் சேர்ந்த கிறிஸ்ரிரூபன் நிமலினி தம்பதிகளின் அன்பு புதல்வர் ஆவார்.

கண்ணே கண்ணாக வருவாயா 
கருவில் உயிராக மலர்வாயா 
ஆனந்தம் மீண்டும் தருவாயா 
அருகினில் மீண்டு தவழ்வாயா 

நெஞ்சில் கனலது கொஞ்சமில்லை 
நித்தம் அழுகைக்கும் பஞ்சமில்லை 
செஞ்சொல்லால் வருடும் தேவதையே 
சித்தம் தெளிவிக்க வா இனிதே 

குறும்பு காண மனம் ஏங்குதடா 
குறுஞ்சிரிப்புக்கு ஆவல் மேவுதடா- உன் 
நற்செயல் எதையும் காணாமலே 
நடக்கின்ற பிணமாக ஆனோமடா 

எங்கள் கண்ணே- எங்கள் 
சின்னக் கண்ணே! 

‘கடவுள்’ அது உண்மையா- அறியோம் 
இருந்தால் ‘அது’ நீயே- உணர்ந்தோம் 
கடவுளைப் பெற்றிட்ட 
பெருமையைத் தந்தாய் 
கடவுளை வளர்த்திட்ட 
வாழ்வையும் தந்தாய் 
கடவுளாய் வணங்கிடும் 
துயரமும் தந்தாய் 
கடவுளாய் இருந்து நீ 
மற்றோரைக் காப்பாய்....

தகவல்: குடும்பத்தினர்

அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்

அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com