யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகராஜா அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலாட்சி(கண்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார்(பபா- கொழும்பு), மோகனாம்பிகை, சதீஸ்குமார்(கனடா), ஞானம்பிகை, குலசெல்வம், கிருஷ்ணாகுமார்(கனடா), கமலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா அரசரட்ணம், ரஞ்சிதம்மா மற்றும் பூமணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் நாகராஜா(கனடா), காலஞ்சென்ற யோகராசா மற்றும் பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), நாகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கந்தையா, பாலசிங்கம், மகேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் பஞ்சரெட்ணம்(கனடா), பரமேஸ்வரி(பேபி), தங்கேஸ்வரன், ராமசந்திரன், மகேஸ்வரி(பேபி ஆச்சி), நாகரத்தினம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுலா(கொழும்பு), சிதம்பரநாதன், மோகனாவதி(கனடா), காலஞ்சென்ற நடனகாந்தன்(பிரித்தானியா), சிவகுமார், மதனிக்கா, நர்மதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், விநோத், அஜினி, நிதிலா, இந்நிலன், மாவலன், அட்சயா, சுவேதா, அஞ்சனி, ஆரணி, மிதுரன், மகிழன், ரக்ஷன், மிதுனா, மிதுரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment