கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி வேலாயுதம்பிள்ளை அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகர், காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சித்தர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதம்பிள்ளை(வேலாயுதம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற சஞ்சயன், ரோஜிதா(பிரித்தானியா), சஞ்சீவன்(Belgium), சதுர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிரஞ்சன்(பிரித்தானியா), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,புஸ்பவதி, செல்வராசா, தனலட்சுமி, மகேந்திரராசா, ரவீந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணபதிப்பிள்ளை, கவிதா(A.O கமநல அபிவிருத்தி திணைக்களம் கிளிநொச்சி), பாலசுப்பிரமணியம், சுகந்தா, மேனகி(பிரித்தானியா), தவமணி, சிதம்பரநாதன், செல்லம்மா(ஓய்வு பெற்ற ஆசிரியர்), செல்வராசா, சிவபாக்கியம், யோகராசா(நோர்வே), வசந்தாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
ஆரனி(பிரித்தானியா), ஆருசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் முரசுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment