பொலநறுவை மன்னம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சோமசுந்தரம் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யோகம்மா அவர்களின் அன்புத் துணைவரும்,
உருத்திரகுமார், சுகுமார், உருத்திரகுமாரி, ஜெயக்குமார், ஜெயக்குமாரி, சுகுணா, கலைச்செல்வன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பொன்னுத்தாய், மாணிக்கவாசகம் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 01:00 மணியளவில் யாழ். கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாத்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment