அமரர் சின்னையா கணேசலிங்கம்

அமரர் சின்னையா கணேசலிங்கம்
பிறப்பு : 24/01/1936
இறப்பு : 02/03/2019

யாழ். இணுவில் வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா எனும் தெய்வம் 

“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருக்க செயல்” 

இந்த குறளிற் குரிய விளக்கமாகவே வாழ்ந்து காட்டியவர் எங்கள் அப்பா இதனைச் செய்வதற்காக எங்கள் அப்பா பட்டபாடுகள் சொல்லில் அடங்காதவை, ஒரு தபால் அதிபராக இருந்து கொண்டு இரவு பகலாக மேலதிகமாக வேலை செய்து, Mail Train இல் Overtime செய்து, அந்த உழைப்பில் எங்களைப் படிக்க வைத்து ஆளாக்கினார்... அப்பா நினைத்திருந்தால் அந்தப் பணத்தை தனது சுக தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம், அப்படி ஒரு செலவும் செய்யாமல் அந்தப் பணத்தை எமது அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பாக எமது படிப்புச் செலவுகளுகாகவே செலவு செய்தவர்... 

இன்று நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம்

அப்பாவின் நேர்மையான கடின உழைப்பும் 

அவர் வழிகாட்டலும் இல்லாமல் வேறொன்றும் இல்லை...

ஒருவன் சொல் கூறாமல், பிரம்பெடுத்து அடிக்காமல்

கடிந்து எரிந்து விழுந்து பேசாமல் ஒரு புன்சிரிப்பால்

தட்டிக் கொடுத்து உற்சாக மூட்டும் வார்த்தைகளால்

ஒரு சினேகப் பார்வையினால் எம்மை

சரியான தடத்தில் பயணிக்க வைத்தவர் அப்பா

எங்களுக்கு புத்தக கல்வியை மட்டும் தரவில்லை 

 வாழ்க்கை கல்வியைப் புகட்டியவர்

எமது சொந்த காலில் நிற்க கூடிய

தன்னம்பிக்கையைத் தந்தவர்

நல்ல மனப்பாங்கை வளர்த்தவர் சட்டத் திட்டங்களை மதிக்கவும் 

நெறிகளுக்கு ஏற்ப ஒழுகவும் சமூகத்திற்கு பயனுள்ள முறையில் வாழவும்

எம்மைப் புடம் போட்டு வடிவமைத்தவர் எங்கள் அப்பா ...


சிறுபிராயத்தில் தனது தந்தையை இழந்து

வறுமையின் பிடியில் சிக்குண்டவர்

எனினும் அவரது அசாதரண திறமை அப்பாவை 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்

சித்தி பெறவைத்தது அதன் பயனாக 

வசாவிளான் மத்திய மகா வித்தியாலய விடுதியில் அனுமதிக்கப்பட்டு 

கல்வியை நன்றாக கற்று தனது 18 வது

வயதிலேயே தபால் அதிபராகப் பொறுப்பு ஏற்றவர்.. 

வட்டுவினியில் இருந்து முதன் முதலாக அரச உத்தியோகத்தில்

இணைந்தவர் என்ற பெருமை அப்பாவையே சாரும்...

இணுவிலில் Post Master கணேசலிங்கம் என்றால் தெரியாதவர்களே இல்லை  நீ ஆற்றை மகன் என்று கேட்டால்

Postmaster கணேசலிங்கத்தின் மகன் என்று சொன்னாலே போதுமானது 

வேறு எந்த ஒரு விளக்கமும் தேவை இல்லை

அந்தளவுக்கு அப்பா ஊரில் பிரபலிக்கம் என்ன கஷ்டம் வந்தாலும் 

எது நடந்தாலும் நீதி நெறியில் இருந்து வழுவாத

எங்கள் அப்பாவை நினைத்துப் பார்க்கிறோம்...

எப்படியான ஒரு கனவான் நீங்கள்

ஆயிரம் புத்தகங்கள் சொல்லித் தருவதை

ஆயிரம் ஆயிரம் நீதி நூல்கள் 

கற்று தருவதை, ஒரு நிமிடத்தில் சொல்லி தந்தவர் நீங்கள்

அப்பா நாங்கள் பெருமைப்படுகிறோம் 

உங்கள் பிள்ளைகளாகப் பிறந்ததை நினைத்து...   

“இந்த பிள்ளையைப் பெற பெற்றோர் தவம் இருந்திருக்க வேண்டும் என்ற கூற்றை விட, நாங்கள் எங்கள் அப்பாவை தந்தையாக அடைய முற்பிறப்பில் தவத்துடன் புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்றால் மிகையாகாது... ஒருவரைக் கூட கஷ்டபடுத்த கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் எங்கள் அப்பா. நாங்கள் ஆறு பேர் பிள்ளைகளாக இருந்த போதிலும் தனது இறுதிக் கருமங்களுக்கான செலவுகளை விட மேலதிகமான பணத்தை சேர்த்து வைத்துவிட்டுதான் அப்பா இறைவனடி சேர்ந்தார். தான் இல்லாத போது கூட நாங்கள் கஷ்ட படக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்தவர் அப்பா. வாழ்வது எப்படி என வாழ்ந்து காட்டிய தெய்வம் நீங்கள், உங்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்வைத் திரும்பி பார்க்கிறோம், நீங்கள் சொன்னதை செய்ததை, எமது பிரச்சனைகளைப் புரிந்து கொண்டதை, எமது வெற்றிகளைக் கொண்டாடியதை, அதே வேளையில் எமது தோல்விகளை ஏற்று கொண்டதை நினைத்துப் பார்க்கின்றோம். நீங்கள் தந்த தைரியத்தை, நேர்மையை உங்கள் அந்த மென்மையான புன் சிரிப்பை நினைத்துப் பார்க்கின்றோம். எங்கள் அம்மா அடிக்கடி சொல்வது போல், மனிசன் ஒரு சிரிப்பாலையே எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்துவிடும். ஒரு மென் சிரிப்பால் யாரையுமே புரட்டிப் போடக் கூடியவர், எவரையுமே தன் வசப்படுத்தி கட்டி போடக் கூடிய அந்த மெல்லிய புன்னகையை நினைத்து பார்க்கிறோம்.

அப்பா, அப்பா இனி ஒரு பிறவி இருந்தால் 

நாங்கள் உங்கள் பிள்ளைகளாக பிறக்க வேண்டும்

நிச்சயாமக உங்கள் வழியில் நடப்போம்

அதைத்தான் நீங்களும் விரும்புவீர்கள்

என்பது எங்களுக்கு தெரியும்

அப்பா உங்களுக்கு எங்களால் நன்றி சொல்ல முடியாது 

ஏனெனில் நீங்கள் எங்களது அப்பா...

எங்கள் அப்பா சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அப்பாவை கவனித்த வைத்தியர்களுக்கும்,  Hospital Nurses and Staff மற்றும் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறிய உறவினர்கள், நண்பர்கள், இறுதியாக அப்பாவின் மறைவை கேட்டு ஆறுதல் கூறி இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது அம்மாவின் சார்பிலும், எங்கள் குடும்பத்தின் சார்பிலும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி... ஓம் சாந்தி...ஓம் சாந்தி...

அப்பாவின் ஆத்மா  சாந்தியடைய

வட்டுவினி பிள்ளையாரை வேண்டி நிற்கிறோம்... 

என்றென்றும் உங்கள் நினைவுடன்

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: குடும்பத்தினர்

அமரர் சின்னையா கணேசலிங்கம்

அமரர் சின்னையா கணேசலிங்கம்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment