அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
பிறப்பு : 19/12/1953
இறப்பு : 26/02/2015

திதி: 02.03.2020 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

தேவியே.....

என்னுயிர்த் தேவியே....

என்னுள் குடிகொண்ட என்னவளே....

நீ எங்கே சென்றாய்?

 தேனாய் பழகி,

தெள்ளமுதாய்ப் பேசி,

தென்றலாய் வீசிய

சுப இலட்சுமியே..

என் இதய வாணியே- நீ

என்னை விட்டு எங்கு சென்றாய்?

 வீடு அழுகிறது!

வெளிச்சமோ தேடுகிறது!

விளக்கு கேட்கிறது- அம்மா

நீ எங்கே என்று?

தூரமாய்ச் சென்று விட்டாலும்

ஓரமாய் ஒருமுறை ஒளியேற்றிடம்மா..

 துடுப்பு இல்லாத படகு போல

சிறகு இல்லாத பறவை போல

திசையறியாது தவிக்கின்றோம்

துடிக்கின்றோம்- வந்துவிடம்மா....

 எங்களுள் வாழும் அன்புத் தெய்வமே!

ஐந்தாண்டுகளென்ன?

ஐநூறு ஆண்டுகளானாலும்

ஆறிடுமா? எங்கள் ஆறாத்துயர்

இறுதி மூச்சுள்ளவரை நினைவுறுத்தி

உங்கள் ஆத்மா நற்பேறடைய

பேச்சியம்மனிடம் இறைஞ்சுகிறோம்

 என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து

கணவர், பிள்ளைகள், மருமக்கள்,

பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.....

தகவல்: குடும்பத்தினர்

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am