திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்

திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்
பிறப்பு : 01/08/1939
இறப்பு : 04/05/2020

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம்(முன்னாள் விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), திலகவதி(வட்டக்கட்சி), புவனேஸ்வரி(லண்டன்), ஞானாம்பாள்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இராசரட்ணம், கணேசு, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 இராசரட்ணம் உதயகுமார்(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), கணேசு ஜெனார்த்தனன்(கமநலசேவை திணைக்களம் உத்தியோகத்தர்- கிளிநொச்சி), இராசரட்ணம் இளங்குமாரன்(வட்டக்கட்சி), ஜெயவேந்தி சிவகுமார்(லண்டன்), இராசரட்ணம் மங்களகுமாரன்(லண்டன்), நிர்மலராஜ் இளவேந்தி(அதிபர், கிளி/சிவநகர் அ.த.க.பாடசாலை), மனோகரன் பிருந்தினி(பொது வைத்திய நிபுணர்- லண்டன்), மனோகரன் அமுதகிரணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சங்கீதா, ஷஞ்சிதன், ஜிந்தீபன், கீர்த்தி, பகிர்த்தன், ஹரிஸ்மேனன், சுருதி, மிர்ணளனி, யானகன், பருதி, கவின், மகிசன், கருணி, புகழ்ளினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்

திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்

Share This Post

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am