யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை(அம்பாள் கபே முல்லைத்தீவு) அவர்களின் ஆருயிர் மனைவியும், துரைராசசிங்கம்(இராசன்- லண்டன்), புலேந்திரராசா(இந்திரன்- ஜேர்மனி), கலையரசி(கலா- சுவிஸ்), கலைமதி(மதி- லண்டன்), லவகுமார்(அப்பன், லவன்- சுவிஸ்), கலைவதனி(வதனி- ஜேர்மனி), ஜீவா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும், கமலாம்பிகை(கமலா), பிரேமளா(பொபி), காலஞ்சென்ற குகதாசன்(குகன்) மற்றும் குணாநிதி(குணா), கேதிஸ்வரன்(சுதன்), கஜேந்திரகுமார்(கஜன்), ராதிகா(ராதி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகேசு, கணேசு, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், உலகநாதன், காலஞ்சென்ற மங்கையற்கரசி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி மற்றும் இலட்சுமணன், காலஞ்சென்றவர்களான காமாட்சி, நாகம்மா, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான திலகவதி, நாகேசு, பேரம்பலம் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும், தரணியா, ஆரணி, அபிநயா, சாருஜன், அனுவர்ஷா, தமிழினி, தாரணி, இனியவன், செந்தாழன், பவித்திரன், யஸ்மிதா, சாளிகா, சாருகா, கனிருத், கவின், கரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment