திரு பெனடிக்ட் அன்டன் தர்மபாலன்

திரு பெனடிக்ட் அன்டன் தர்மபாலன்
பிறப்பு : 17/01/1950
இறப்பு : 08/09/2020

யாழ்ப்பாணம் வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி கிழக்கு, கொழும்பு தெஹிவளை  ஸ்ரீ சரணங்கர வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ட் அன்டன் தர்மபாலன் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் பெனடிக்ட்  மேரி மாகிறட் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பசுபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருப்பதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், விசாகன்(ஜேர்மனி), ஜனனன்(ஜேர்மனி), விதுர்த்ரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மேரி திரேசா(இந்திரா- லண்டன்), சரோஜா(கனடா), மேரி ஜெசிந்தா(யாழ்ப்பாணம்), லலிதா(பிரான்ஸ்), றஞ்சினி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரதீபா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும், அசுபதி(திருகோணமலை), ரகுபதி(லண்டன்), ஜெகசிவமணி(சிந்து- லண்டன்), கணபதி(கொழும்பு), ஆனந்தநடேசன்(கொழும்பு), பேரின்பயசோதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 09-09-2020 புதன்கிழமை முதல் 10-09-2020 வியாழக்கிழமை  வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இல. 20, அச்சக வீதி, சுண்டுக்குழியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 12-09-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு  அதனைத்தொடர்ந்து யாழ் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு பெனடிக்ட் அன்டன் தர்மபாலன்

திரு பெனடிக்ட் அன்டன் தர்மபாலன்

Contact Information

Name Location Phone
கணபதி - மைத்துனர் sri lanka +94773073605
ஆதித்தன் - மருமகன் sri lanka +94765773567
விசாகன் - மகன் Germany +491734084941

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment