மலேசியாவைப் பிறப்பிடமாகவும், போயிட்டி, லண்டன் Langley Slough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் தனபாலகுமார் அவர்கள் 10-10-20 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தேவாரம் தம்பதிகளின் மருமகனும், தேவகி அவர்களின் அன்புக் கணவரும், ரமேஷ், கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும், மைத்திரி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. மாணிக்கராஜா அவர்களின் அன்பு சம்மந்தியும், புஸ்பராணி தியாகலிங்கம், காலஞ்சென்ற கமலராணி ரமணானந்தன், இந்திராணி ராஜரத்தினம், கணேச செல்வம், காலஞ்சென்ற கனகசேகரன், பத்மநாதன், பத்மராணி தம்பாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுகந்தி ராஜேஸ்வரன், நிர்மலா திருநேசன், ரேணுகா பேப்பேரில், மகேந்திரன் பிரான்சிஸ், ரவி சந்திரன் பிரான்சிஸ், அமரேந்திரன் பிரான்சிஸ், ரஞ்சி ஞான சேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற தியாகலிங்கம், ரமணானந்தன், ராஜரத்தினம், தம்பாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும், எலா, சென, மிலா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இன்றைய நிலைமை காரணமாக இறுதி நிகழ்வில் எல்லாரும் கலந்து கொள்ள இயலாது. தயவு செய்து மன்னிக்கவும். ஆனால் viewing க்கு விரும்பியவர்கள் வரலாம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment