யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை செங்கமலம் தம்பதிகள், மனுவேற்பிள்ளை அருள்மேரி தம்பதிகளின் செல்லப் பேரனும், கணபதிப்பிள்ளை(இளைப்பாறிய பரிசோதகர் இ. போ. ச) மேரி சரோஜா(இளைப்பாறிய அதிபர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், சுதர்சினி(ஆசிரியர் வேலனை சைவப்பிரகாச வித்தியாலயம்), ஜெகதீபன்(பிரித்தானியா), நவதீபன்(பிரித்தானியா), துஷ்யந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வின்சன்(பிரித்தானியா), றூபி(பிரித்தானியா), ரமணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குணரத்தினம், காலஞ்சென்ற அன்னமலர், அன்னபாக்கியம் ஆகியோரின் பெறாமகனும், அருளானந்தம், மரியநாயகம், சேவியர் தனிநாயகம்(அமெரிக்கா), அன்ரன் திருச்செல்வம் ஆகியோரின் ஆசை மருமகனும், ரிஷிகாந், கொளசிகாந், நெனிஹா ஆகியோரின் ஆசை மாமாவும், வைஷ்ணவி, ஆதீஷ், ஒமெஸ் ஆகியோரின் சித்தப்பாவும், தர்ஷினி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
சாந்தினி, நிஷாந்தன், Dr துஷாந்தன், நிரோ, அருணன், ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment