யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயன் வைரவன் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயன் நாகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தன் குஞ்சி தம்பதிகளின் அன்பு மருமனும், சின்னன் அவர்களின் அன்புக் கணவரும். விஜயகலா, விஜயவிந்தன், விஜயவெற்றி, விஜயபிறை, விஜயபதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரன், கௌரி, இந்திரா, வதனி, அகிலா ஆகியோரின் பாசமிகு மானாரும்,காலஞசென்றவர்களான இளையவன், கந்தன், சின்னபிள்ளை(இலங்கை), பொக்கணத்தி(இலங்கை), சின்னத்தம்பி(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,சங்கிதா, சதுஷன், சம்பத், மதுவந்தி, மாதங்கி, மிகாவினி, சபரி, சவினா, விதுஷா, விதுஷன் ஆகியோரின் அனபுப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment