யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் சசிகலா அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், பூலோகசிங்கம் வேதநாயகி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், மகாலிங்கம் லலிதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், கதிரவன் அவர்களின் அன்புத் தாயாரும், ஜெயக்குமார், உதயகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புத் தங்கையும், சசிந்திரா, கலாவதி, புரந்தரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சுகந்தினி, சாந்தினி, டினேஷ்வரன், நந்தகோபன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும், லோகநாதன், தயாபரன், புராதனி, துஷ்யந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், நிதர்சனா, நிதர்சன், ராகவி, மது ஸ்ரீ, சரண், கிருசாந், நிருசிகா, டினுசிகா கஜன், ஜாதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமியும், அஞ்சனா, சஸ்வின், சாய் ஆதவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment