யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ஆம் யூனிற்றை வதிவிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசலிங்கம் அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பதிவிரதாசிரோன்மணி(இராசத்தி) அவர்களின் அன்புக் கணவரும், பகீரதி(சசி எவ்றி தமிழ்ச்சோலை ஆசிரியை), சாந்தரூபி(சுதா), சாந்தினி(உஷா), நவசீலன்(ராசன்), தவச்செல்வன்(குட்டித்தம்பி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான நவரட்னம்மா, நகாரத்தினம், பாக்கியம், யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், விவேகனாந்தராசா(ஆனந்தன்), சத்தியகுமார்(ராசன்), சண்முகனாந்தவேல்(அப்பு), சுகிர்தா, தர்சினி(சுரேகா) ஆகியோரின் மாமானாரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, வைத்திலிங்கம், சபாரட்ணம் மற்றும் செளவுந்தரம் மற்றும் பராசக்தி, காலஞ்சென்றவர்களான நவரட்ணசிங்கம், நித்தியலட்சுமி, மற்றும் மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(பூபாலசிங்கம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற காசிலிங்கம், மற்றும் மனோன்மணி, கந்தசாமி, காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் சகலனும், விவேசன், கபிலன், அபிரா, சனோஜன், அங்கீரா, அட்சயன், அட்சிகா, அபிசிகா, அங்கவி, அருசன், அகானா, ஆரணா, அதிகன், ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனா நோய்த் தொற்றினை கருத்தில் கொண்டு ஈமைக்கிரியை, தகனம் ஆகியன அரசாங்கத்தின் கொரோனா விதிகளுக்கு அமைய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment