யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் திருவாநிதி அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும், பெனோ, சிந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தயாநிதி, கிருபாராசா(ஜேர்மனி), உருத்தியாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற றோகினிதேவி(பிரான்ஸ்), வரதராசா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நடேசராசா(ஈசன்- இலங்கை), உமா(ஜேர்மனி), வித்தியநாதன்(பிரான்ஸ்), லதா(ஜேர்மனி), காலஞ்சென்ற சதீஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற அருந்ததி(இலங்கை), ராஜலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், எஸ்ரெல் அவர்களின் பெரியம்மாவும், ஜெவிரன், ராஜிபன், யனனி, பெரவின் ஆகியோரின் மாமியாரும், துரைராசா(கனடா), பேரம்பலம்(லண்டன்), ராசமணி(நோர்வே) ஆகியோரின் பெறாமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment