வவுனியா கருங்காலி குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கள்ளிக்குளத்தை வசிப்பிடமாகவும், தற்போது ஐக்கியா அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு பாக்கியம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளயதம்பி, அபிராமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை வீரபாகு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சரவணபவானந்தன், விஜயகுமாரி மற்றும் சிவலோகநாதன்(லண்டன்), செல்வராணி(பிரான்ஸ்), கிருஷ்ணகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), ஜங்கரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நல்லம்மா, லெட்சுமி செல்லாச்சி(இலங்கை), பாக்கியநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், சுப்பிரமணியம்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற தருமர், கதிர்காமநாதன்(இலங்கை), சின்னக்கிளி(இலங்கை), நாகமுத்து(இலங்கை), காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை பொன்னம்மா, வள்ளிப்பிள்ளை, கந்தப்பு ஆகியோரின் மைத்துனியும்,சிவமதி(லண்டன), சிறீதரன்(பிரான்ஸ்), சிவனேசநாதன்(அப்பு- ஐக்கிய அமெரிக்கா), மாலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனேஸ், சாரங்கன், டிலுக்சன், சரணியா, துர்க்கா, துசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment