யாழ். வேலணை நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வதிவிடமாகவும், இங்கிலாந்து Bedfordshire வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நல்லூர் நடராஜா அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னையா மனோன்மனி சின்னையா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் புவனேஷ்வரி யோகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இரத்தினலீலா அவர்களின் அன்புக் கணவரும்,சுபாஜினி, சுதர்ஷினி, சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நகுலதேவா, உதயகுமார், நிரஞ்ஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கருனைலிங்கம் மற்றும் பாலதேவி, துதிக்கைவேல் ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சரஸ்வதி, முத்துச்சாமி, பரமேஷ்வரி ஆகியோரின் மைத்துனரும்,சந்திராவதி, கணேஷராஜா, கமலசோதி, காலஞ்சென்ற வரதராஜா, யோகராஜா, ஜீவராஜா, இந்திராதேவி, கலாதேவி, மாலினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற வரதராஜா, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான சிவநாதன், நவராஜினி மற்றும் றீடா, ஜெயா, வரதராஜா, சோதிலிங்கம், காலஞ்சென்ற நாதன் ஆகியோரின் சகலனும்,நர்மதா, நிவேதன், நிவேதிக்கா, ஆதவன், மகதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment