யாழ். கரவெட்டி கிழக்கு கவுந்திலைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி கட்டையடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்கள் 12-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,திரவியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,வித்தியா, அகல்யா, சந்திரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற இராமநாதன், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கர், லக்ஷ்மன், பரசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுஷா, நிதுஷா, லத்திகா, அனேஷ், சஜீ, வருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment