யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருளானந்தம், காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,விஜிதன், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோமதி(சுவிஸ்), காலஞ்சென்ற தவஈசன், இந்துமதி(சுவிஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுந்தரலிங்கம்(சுவிஸ்), ஜமுனா (கனடா), ஜெயசோதிநாதன்(ராசன்- சுவிஸ்), விஜயகுமார்(ரவி- சுவிஸ்) மற்றும் திருவருள்செல்வன்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), ரோகிணி(சுவிஸ்), வதனி(ஹொலண்ட்), ராஜ்குமார்(லண்டன்), வாகினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திவ்யா, ஜெயமதி, நாத்தனா, ஜெயகாரணி, வினித், வினேசா, வினேசன் ஆகியோரின் மாமனாரும்,ஜயிவன், ஜஈசன் ஆகியோரின் சித்தப்பாவும்,வீரா, சய்ரா, மீரா, நீலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment