யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் ஜெயந்திநகரை வதிவிடமாகவும், ஜேர்மனி Remscheid ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜமுனாராணி(ஜமுனா) அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷா, ஹரிதர்ஷன், சுதர்ஷன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,மதன்ராஜ், யசோதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிலா, நவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,புவனேந்திரன்(இலங்கை), கனகாம்பிகை(இலங்கை), திலகவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான முருகையா, இரத்தினபூபதி மற்றும் இராசபூபதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற செல்வராணி, யோகராணி(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, ராதாராணி(இலங்கை), ஸ்ரீபரந்தாமன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகஜேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment