அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி எலிசபெத் பாக்கியம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவனேசகுமாரி அவர்களின் அருமைக் கணவரும்,எலிசபெத், இசபெல்லா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி(மலர்), அல்பேட் ஜெகராஜசேகரம் மற்றும் ஜோன் குமாரகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஜேர்ச் திருச்செல்வராஜா, டேவிட் சந்திரசேகரம்(அகில இலங்கை சமாதன நீதிவான், கல்முனை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கலாநிதி சாம் தியாகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பரிமளாதேவி சங்கர்(பிரித்தானியா), சுமதினிதேவி பிரதீபன்(பிரித்தானியா), சிறிகீசன் சிவலோகமூர்த்தி, நிதர்சன் சிவலோகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,சார்ள்ஸ், பிரான்சஸ், கமலரூபன், நிரோசன், அனுசா, தர்சி, பொப்ஹான், நிரோசிக்கா, நிலெக்சிகா, உசாந்தினி ஆகியோரின் அன்பு பெறா தந்தையும்,காலஞ்சென்ற Dr. S.S.S சாம்பசிவமூர்த்தி, சிவகுமாரி சிவகுமாரன், சிவலோகமூர்த்தி, லலிதா, இராசமணி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனை மற்றும் தகனம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: Dr. சாம் தியாகலிங்கம்(மருமகன்- ஐக்கிய அமெரிக்கா)
2 Comments - Write a Comment