அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்

அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்


திதி : 27 ஒக்ரோபர் 2017


பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மீண்டும் நீ வருவாயா ஆகாஸ்!

கருவாகி உருவாகி சிசுவாகி
கனவையும் புயலையும் கவலையும்
கலைத்திட்ட எம் உயிருடன் கலந்த ஆகாஸ்
கனவாகிவிட்டதே எம் நினைவெல்லாம்!

அன்பும் பண்பும் அறிவும் நிறைந்தவனே!
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
அத்தனையும் உமைப்போல் ஆகுமா!

இப்பாரினிலே எம்மைப் பிரிந்து
மூன்றாண்டு ஆனதையா!

பாவியர் உள்ளம் உருகுதையா உன் நினைவுகளில்
பூத்துக் குலுங்கும் பூக்களின் புன்னகையில் உன்
குதூகலப் பேச்சை குழந்தைச் சிரிப்பை தொலைத்து
ஆண்டுகள் மூன்று ஆனதையா
பாரினில் உன் நிஜத்தை காணமுடியவில்லை!

அன்பான அப்பா பாசமான அம்மா
ஆசைமிக்க ஆஷா(பிரியங்கா), மதுஷா அக்காமார்
உன் நிழல் போல் உருவான அருமைத் தம்பி அஸ்வின்
அரவணைத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்
அத்தனை பேரும் உன் புதிய உதயத்தை
இத்தரணியில் வேண்டுகின்றோம்
இறைவனிடம் யாசிக்கின்றோம்!

நீ மீண்டும் வருவாயாக ஆகாஸ்!

உன் பிரிவால் துயருறும் அம்மா, அப்பா,
அக்காமார் ஆஷா, மதுஷா, தம்பி அஸ்வின்மற்றும் உற்றார், உறவினர்

தகவல்

குடும்பத்தினர்


 


அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்

அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment