அமரர் நல்லையா அன்னலெட்சுமி

அமரர் நல்லையா அன்னலெட்சுமி


யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா அன்னலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு ஆண்டொன்று ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே

பெயர் பிறக்கும் போதே பொருந்தி வருவதுதான்
ஆனால் உங்களுக்குப் பொருந்தியது போல்
இதுவரையில் எவருக்கும் பொருந்தவில்லை
அன்னலக்‌ஷமி.......

அன்னம் இட்டே சிவந்தகைகள்
அள்ளிக் கொடுத்தே மகிழ்ந்த இதயம்
அவரா இவரா என்று எதையும்கேட்டுப் பார்த்ததில்லை..
எவருக்கும் இரங்கும் இனிய சுபாவம்..

இது மட்டுமா..?
அறிவுச் செல்வத்துக்கும் குறைவில்லை..
அதையும் எல்லோர்க்கும் தாராளமாய் தந்தீர்கள்!
அதனால் அதிக உவகை கொண்டீர்கள்!

நான்கு ஆண்களுடன் ஒற்றைப் பெண்ணாய்...
நல்ல திருமகளாய் பிறந்த உங்களிடம்
நற்குணங்கள் தவிர வேறெதையும்
நாம் கண்டதில்லைத் தாயே...!

பிள்ளைகள் எங்களை வளர்ப்பதை.
பிறவியின் உயர்வாய் நினைத்தீர்கள்..
பேரப்பிள்ளைகளைக் கூட
நீங்கள் பிரியமாய் அறிவூட்டி வளர்த்தீர்கள்!

உதவி செய்வதே உயிர்மூச்சு என
உலகில் வாழ்ந்தவர் நீங்கள் அதனால்
உண்மையாகவே உங்களுக்கு மரணமில்லை
என்றும் இறவாப் பெருவாழ்வே உலகினிலே

காற்றுப் பெருவெளியில் உங்களைக் காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்..
கடவுளை வேண்டுகிறோம் ஆத்ம சாந்திக்காய்

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்

குடும்பத்தினர்


 


அமரர் நல்லையா அன்னலெட்சுமி

அமரர் நல்லையா அன்னலெட்சுமி

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment