அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்

அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்


யாழ். கிளாலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், முரசுமோட்டை, முல்லைத்தீவு கைவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை...

உங்கள் பாதக் கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்!!
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் நினைவுத் திருப்பலி 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நாவற்குழி புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்

அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment