அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா

அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, திருகோணமலை உப்புவெளி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

வளம் கொழிக்கும் பெருஞ்செல்வ நாடாம்
மலேசியாவில் பிறந்தாலும்
பண்புடனே வளர்வதற்கும்- நல்ல
வாழ்க்கைக்கும் சிறந்த மண்ணாம்
நம் தமிழீழம் வந்தடைந்தார்

வாழ்ந்த காலம் ஆண்டு நூறைத் தொட்டாலும்
நினைவாற்றல் நேர்பார்வை தெளிவான பேச்சுடனும்
நெஞ்சமதில் உறுதியுடன் நெடுங்காலம்
நம் தமிழீழ மண்ணிற்காய் சமூக சேவைகள்
பலவும் சளைக்காது கடைசிவரை
சபைகள் பலவற்றில் முன்நின்று செய்தீர்கள்!

காவல்த்துறைதனிலே கண்ணியமாய் கடமை செய்தீர்
றோட்டறிக் களகமுடன் இணைநின்று
இன்முகமாய் பணிகள் பல செய்தீர்!

வாழ்க்கையிலே மேடுபள்ளம் எதுவரினும்
சூழ்நிலைகள் அறிந்துதவும் நல்மனம்
தாழ் நிலைகள் பாராமல் வாழ்த்தி வழிசமைத்து
சாதி சமயமெல்லாம் ஒன்றெனத்தான் கருதி
நீதி நெறிகளையே கருவாக்கி வாழ்ந்தீரையா!

பெற்ற உம் பிள்ளைகள் மனமறிந்து
பேர் சொல்ல வளர்த்தீரே
அன்பின் திருவுருவாய் பண்பின் இருப்பிடமாய்
நம் கண்ணின் முன்னே இன்னும்
எம் எண்ணத்தில் இருக்கின்றீர்கள் ஐயா!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலை உப்புவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

எங்கள் ஐயாவின் மறைவுச்செய்தி அறிந்து இல்லம் வந்தும் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், அச்சமயத்தில் சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணம் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 697/3 ஏகாம்பரம் றோட்,
விநாயகர் வீதி,
உப்புவெளி,
திருகோணமலை.
தகவல்
குடும்பத்தினர்

அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா

அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா

Contact Information

Name Location Phone
கரன் நோர்வே +4748262645
கருணா டென்மார்க் +4598434231
மங்களா பிரித்தானியா +442085544028

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment