அமரர் கிட்டினர் நாகராசா

அமரர் கிட்டினர் நாகராசா

திதி : 12 டிசெம்பர் 2017


யாழ். கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிட்டினர் நாகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம் உங்கள் நினைவினிலே

உயிர் தந்து உடல் தந்து உங்கள்
உழைப்பை தந்து உடனிருந்து எங்கள்
உயர்வுக்கு வழி அமைத்து
கடும் நோயின் பிடியெல்லாம் கடந்து
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா

உங்கள் இறுதி மூச்சு நின்றோட
இன்றளவும் நம்ப முடியவில்லை
நீங்கள் இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

"
நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்"

வீட்டு முகவரி:
கைதடி- நாவற்குழி,
கைதடி,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் கிட்டினர் நாகராசா

அமரர் கிட்டினர் நாகராசா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment