அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)

அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ்குமார் றொசாய்ரோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அருமை மகனே ரமா!
பன்னிரண்டு திங்கள் பறந்தோடி விட்டனவே
நீ எங்களை பரிதவிக்க வைத்து விட்டு....!
காலனுடன் கண்ணுக்கெட்டா காத தூரம்சென்று!
ஆனால் உன்னை பத்து திங்கள் சுமந்து பெற்ற
உன் அன்னையின் பாழும் வயிற்றில் காலன்
மூட்டிய தீயின் கோரம் சற்றும்
தணியவில்லையே மகனே!

தணிக்கும் விதமும் தெரியவில்லையே!
உன்னைப் பெற்றவயிறு பற்றி எரியுதையா
பாவியுயிர் கரைந்து உருகுதையா
கண்ணுக்குள் நிற்கிறாய்!
கண் இமைக்க முடியாமல் தடுக்கிறாய்!
கண் எதிரில் வர மறுக்கிறாய்
கண்களை குளமாய் வடியப் பண்ணுகிறாய்!
கனவா நினைவா, நாங்கள் உன்னை இழந்தது?

கண்ணுறங்க முடியவில்லையே!
நீ இறந்தது கற்பனையா இல்லை
கட்டுக்கதையா புரியவில்லையே?
கருத்தை விட்டகலா நினைவாய், நிஜம்
எங்களை அணு அணுவாய் கொல்லுகிறதே
சித்தம் கலங்கி பித்து பிடித்த ஜடமாய்
குற்றுயிரும், குலையுயிருமாய்
ஊனுருகி நெஞ்சு வெடித்து துடியாய் துடிக்கும்
உன் தாயின் சோகம் என்று தணியும் மகனே!

எங்கனம் மறையும் ஐயா!
தணியாத தாகமாய் ஆறாத பெரு
நெருப்பாய் அலைபாயும் உன்
சகோதரங்களின் நெஞ்சங்களுக்கு
ஆறுதல் இனி எப்போ கிடைக்கும் மகனே!
மனம் கரைந்து கதறுகிறோம்!
உணர்வுகளின் வெப்ப அகோரத்தில்
நெஞ்சங்கள் எரிமலையாய்
வெடித்து சிதறுகிறோம்!

ஏக்கப்பெரு மூச்சில் மூர்ச்சையாகி
சொல்லொணா துயரில் பேச்சிழந்து
ஸ்தம்பித்து நிற்கிறோம்!
ஐயோ ஆறும் வழி தெரியவில்லையே!
ஆற்றும் சக்தியும் யாரிடமும் இல்லையே!
மறக்க முடியாத, பாசம் நிறைந்த,
ஓர் உன்னத உயிரை அன்பின்,
பொக்கிஷத்தை எமக்கு பரிசாய் தந்து
விட்டு பாதியில் பறித்தெடுத்ததன்
நியாயம் என்ன கடவுளே!

பரிதவிக்கும் எங்கள் உள்ளங்களுக்கு
விளங்கவில்லையே?
என்ன தவம் செய்தேன் உன்னை
மகனாய் பெற்றெடுக்க என்று புளகாங்கிதம்
அடைந்த உன் தாயின் உள்ளம் இன்று
என்ன பாவம் செய்தேன் உன்னை இழக்க
என்று எண்ணி எண்ணி துடியாய்
துடிக்கிறதே ஐயா!
இறைவனே ஏன் எங்களுக்கு இந்த
ஆறாத்துயரை தந்தாய்?

 நாங்கள் செய்த பாவம் என்ன ஐயா
என் செல்ல மகனே! தங்க மகனே!
என் கடைசி மகனே! காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்! ஏன் எங்கள்
உள்ளக்கனவுகள் கூட கைகூடும் ஆனால்
உன்னுடன் நாங்கள் பகிர்ந்து கொண்ட
இந்த உறவின் உயிர்த்துடிப்பும்
அன்பின் பிணைப்பும் கால ஓட்டத்தால்
மாறுமோ மகனே?

என்றுமே மாறாது மறையாது!
என் செல்ல மகனே தம்பி ரமா
உன்னால் வந்த இந்த சொந்த பந்தம்
இந்த ஒரு பிறவியுடன் முடிந்து போகும்
உறவல்லவே! ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த
பாசமும் நேசமும் உன்னைத் தொடர்ந்து
 
வரும், தொடர்ந்து வரவேண்டும் மகனே!
உன்னைப் போன்ற ஓர் இனிய உறவை
மறப்பது தான் எப்படி?

என்றென்றும் நீ எங்கள் உள்ளங்களிலும்
இல்லங்களிலும் எங்கள் உயிர் உள்ள
வரையிலும் சிரஞ்சீவியாக இருப்பாய்
இது எங்கள் ஆத்மாவின் தெய்வ சத்தியம்!
மானிடர்களின் பிறப்பையும் இறப்பையும்
நிர்ணயிக்கும் பரம தேவனே!

விலைமதிக்க முடியாத செல்வத்தை இழந்து
துடியாய் துடிக்கும் எங்கள் 

அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)

அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)

Contact Information

Name Location Phone
திருமதி.கலா தியாகேந்திரன்(மெற்றில்டா) அவுஸ்ரேலியா +61397820699
திருமதி.ஆன் திருக்குமார் கனடா +14162888904

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment