அமரர் செல்லத்துரை ரூபன்

அமரர் செல்லத்துரை ரூபன்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று எம்முள்..!
நான்கு சுவர்களுக்குள்
நாளிகையும் அதுவாய் கழிகிறது !
ஆண்டுகள் ஆனது ஒன்று
ஆறவில்லை அண்ணா எம் மனம்..

ஆனந்த கூட்டில் நாம் ஆறுபேரும் அன்போடு
வாழ்ந்தது இன்றும் மனத்திரையில் எம்முள்..
ஆறு எண்ணில் பிறந்து ஆறுபேருடன்
வளர்ந்து நாற்பத்தியாறில் எமை விட்டு பிரிந்து
இரண்டாயிரத்தி பதினாறில் எமை விட்டு
விண்ணுலகம் செல்வாய் என
யாரறிவார் அண்ணா??

கண்ணீரில் நீந்துகிறோம் எம்
நினைவுகள் அனைத்தும் உன்
நினைவுகளாக அலை மோதுவதால்..
ஏங்கி நிற்கும் எம் நிலை அறிந்து
எமை தாங்கி பிடித்து இன்நிலை
போக்க எம் அடுத்த பிறவியிலும்

நீயே எம் உடன் பிறப்பாக வேண்டுமென
இரக்கமற்ற இறைவனிடம் மண்டியிட்டு
வேண்டுகிறோம்!
உன் நினைவுகளோடு!

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் செல்லத்துரை ரூபன்

அமரர் செல்லத்துரை ரூபன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment