அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா

அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா


திதி : 30 டிசெம்பர் 2017


யாழ். கொடிகாமம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், சுவிஸ் Lucerne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி ஸ்ரீறங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா

அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?

நேற்று நடந்தது போல் இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்...
நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...

தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???

மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்

குடும்பத்தினர்


 


அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா

அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment