அமரர் கந்தையா தங்கம்மா

அமரர் கந்தையா தங்கம்மா

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தங்கம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

இதய அஞ்சலி

மண்ணுலகில் மாணிக்கங்கள் ஆறை
விட்டு விண்ணுலகில் யாரைத் தேடிச்
சென்றாய் தாயே?
பொன் உலகாம் புங்கையூரில் பிறந்து
பெண் உலகை பெருமை சேர்க்கும்
வெண்மை யூராம் கனடா நாட்டில்
மண்ணுலகில் மாணிக்கங்கள் ஆறையும்
விட்டு- விண்ணுலகில் யாரைத் தேடிச்
சென்றாய் தாயே?

ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும்
மாண்டார் திரும்புவதில்லை அன்னையே!
தோன்றுவார் பூமியில் உன்போல் அன்னை!
இருந்தும் தோன்றுமோ உன் போல் அன்னை 

எங்கள் நண்பனுக்கு?
நீ இருந்த இடத்தை அவர்களுக்கு
யார் நிரப்புவார் அன்னையே!

பிள்ளைகள் ஆறைப் பெற்றாலும்- தாயே
நீ பேரின்பம் பிள்ளைகளால் பெற்றிருந்தாலும்
மண்ணை விட்டு விண்ணை சென்ற உன்னை
எண்ணிப்பார்க்கிறோம் பிள்ளைகள்போல்!
தாயே இறப்பிலும் சிறப்புத்தேடினாயோ
உன் பிள்ளைகளின் பெருமை சொல்ல
இருந்தும் துடிக்கின்றோம் நாங்களும்
உன் பிள்ளைகள் போல

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
அன்னைபோல்- ஓர்
உறவு இவ்வையகத்தில் உண்டோ!
அன்னையை இழந்து துடிக்கும் எங்கள்
நண்பன் அருளுக்கும் அவர்
குடும்பத்தார்களுக்கும் எங்கள் ஆறுதலையும்
அன்னைக்கு
எங்கள் இதய அஞ்சலியையும்
தெரிவிக்கின்றோம்

அருளின் நட்புக்கரங்கள் நண்பர்கள்
புங்குடுதீவு மகாவித்தியாலயம் 1987

தகவல்

நண்பர்கள்

 

அமரர் கந்தையா தங்கம்மா

அமரர் கந்தையா தங்கம்மா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment