யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Bolton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதா கேதீஸ்வரன் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடேசபிள்ளை சொர்ணலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கெங்கேஸ்வரன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேதீஸ்வரன் (ராசன்) அவர்களின் அருமை மனைவியும்,
பிரதீபன், ஜீபிதா, தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலாதேவி, தமிழரசி, சிவகாமசுந்தரி, நளாயினி, குமரகுருபரன், கவிச்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லோகேஸ்வரன், மகாத்மநாதன், தேவன், கிருபாகரன், ஜேமி, மதிவதனன், நகுலேஸ்வரன், நிமலேஸ்வரன், நாகேஸ்வரன், நிரஞ்சினி(ராஜி), காலஞ்சென்ற நாகேந்திரன்(வாத்தி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாழினி, சுபாஜினி, விஜி, அனபாயன், சுமி ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்ற இராஜலிங்கம் மற்றும் யசந்தி தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.