யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தனபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காராளபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழரசி, ஸ்ரீராகவன், பத்மபிரியா, ஜனார்த்தனன், வாகீஸ்வரி, கௌரீஸ்வரி, ஜீவிதா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதிஸ், மைதிலி, குமுதா, குலதீபன், சுதர்சன், நிசாந்தன், துஷிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபிக்சன், சுஜானி, ஹரீஸ், பிரவீனா, பிரித்திக், நிரேஸ், நிகிதா, கனித்தமிழ், சிவானுகா, பாதுசன், அத்விகா, தஸ்மிகன், வர்ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி, ஆனந்தமூர்த்தி, கிருபானந்தமூர்த்தி, சுந்தரமூர்த்தி, நல்லைவாசன் மற்றும் மணிமேகலை, கண்ணகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோதிமலர், காலஞ்சென்றவர்களான குணரத்தினம், சோமசுந்தரம் மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.