இந்தியா சென்னையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. அகிலா சந்திரசேகரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
ஓய்வின்றி உழைத்து
ஓய்ந்து விட்டீர்களே!
வாடுகின்றோம் நாங்கள்
உங்கள் நினைவுகளால்...
உங்கள் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உங்கள் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உங்கள் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உங்கள் நினைவுகள்
என்றும் எம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..