யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லிங்கப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், அருள்நாதன் சசிகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
ரேவதி, சிறீவதி, வீரராகவன், கலாவதி, பிரபாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், பேரின்பநாதன், நளாயினி, ஆனந்தராஜா, கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சமரன், சயானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பிரதீபன், சஜோபா, சஜிந்தினி, திருக்குமரன், தீபிகா, தினுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
9 Comments - Write a Comment