யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
நவஞானம்(கலா- லண்டன்), தவரஞ்சனி(ரஞ்சி- கனடா), நளாயினி(பட்டு- கனடா), பரமகுமரன்(பரா- லண்டன்), காலஞ்சென்ற சிவகுமாரன்(சிவா), திருஞானகுமரன்(குருக்கள்- கனடா), செந்தில்குமரன்(Andy- கனடா), ஆனந்தகுமரன்(கண்ணன்- கனடா), ஞானரூபி(சூட்டி- கனடா), கலாநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவானந்தன், காலஞ்சென்ற கனகலிங்கம், குணரட்ணம், விஜயகுமாரி(ரோகினி), கரோலின், ரஞ்சனி, தேவா, கண்ணா, குருபரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அலானி, நேயம், அனீசா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment