திருமதி நாகேஸ்வரன் புஸ்பராணி

திருமதி நாகேஸ்வரன் புஸ்பராணி
பிறப்பு : 30/05/1946
இறப்பு : 30/04/2020

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் புஸ்பராணி அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று Paris இல் இயற்கை எய்தினார். அன்னார், புங்குடுதீவு மேற்கு 4ம் வட்டாரம் இறுபிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இலங்கையர் கனகசபை, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகேஸ்வரன்(பரந்தன்- இரசாயனக்கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும், நகுலேஸ்வரன்(செல்வன்- பிரான்ஸ்), நவதீஸ்வரன்(ராசன்- பிரான்ஸ்), நகுலேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்), நவதீஸ்வரி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்(அதிபர்- கலைஞர் செல்வம்), சபாரத்தினம்(முன்னாள் அதிபர்- கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி) மற்றும் அரியரட்ணம்(ஆசிரியர்- கொழும்பு வெஸ்லிகொலிச், பாரீஸ் மெய்கண்டான், பிரான்ஸ்), பூங்கோதை பன்னீர்செல்வம்(ஆசிரியை- புங்குடுதீவு சுப்பிரமணியன் மகளிர் கல்லூரி, அதிபர்- கனடா தமிழ்ப் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வேலணையைச் சேர்ந்த நடராசா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரியும், சியாமளா, சிவரஞ்சனி(சுதா), ரமணன், கலைரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அன்னபூரணி(சுவிஸ்), காலஞ்சென்ற கனகேஸ்வரி, சத்தியதேவி(பிரான்ஸ்), பன்னீர்செல்வம்(கனடா), ஜெகசோதிமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கௌசல்யா, வத்சல்யா, சுரேந்திரன்(சுரேஸ்), மேகலா, சத்தியேந்திரன், சர்மிளா, பிரபாலினி, கமலேந்திரன், கிருபாலினி, உமாசங்கர், உதயசங்கர், உதயகௌரி  ஆகியோரின் அன்பு மாமியாரும், ஶ்ரீனிகாந், பிரதீஸ், சுஜீதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், நிக்கோலா, பிரியங்கா, யோகான், நிஷாந்தினி, நிரோஜினி, நீரா, கெளவுந்தியா, மயூரன், பிரதீபா, நஜீத், மதுஷன், தீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி நாகேஸ்வரன் புஸ்பராணி

திருமதி நாகேஸ்வரன் புஸ்பராணி

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am