யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கினை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவராசா அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சற்குணராசன், தற்பராதேவி(பிரான்ஸ்), சிறீதரன்(டென்மார்க்), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), ரவிச்சந்திரன்(பிரித்தானியா), உதயகுமாரன்(பிரான்ஸ்), சிவகுமாரன்(பிரான்ஸ்), சுரபாஸ்கரன்(ஆசிரியர்- யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), உமா(டென்மார்க்), ஜெகதீஸ்வரி(பிரித்தானியா), லலிதா(பிரித்தானியா), வத்சலா(பிரான்ஸ்), பிரசாந்தி(ஆசிரியை- யாழ் மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலை) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற பராசக்தி, அரசரட்ணம், இராசரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சுந்தரம், தங்கரெத்தினம் மற்றும் பாலசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், இராசரட்ணம் சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மௌனிகா, பிரதிகா, கபில்நாத், யசோநாத், கஜோநாத், ஜனேஷ், மதுரா, தனுநாத், தனுசன், சுவாதீகா, அகரன், அரன், அகானா, அஸ்வின், அவ்யா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment