யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி தர்மகுலசிங்கம் அவர்கள் 01-06-2020 திங்கிட்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அருந்ததி அவர்களின் ஆருயிர்க் கணவரும், தர்ஷன், நிவிதன், அனிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிவித்தா அவர்களின் அன்பு மாமனாரும், தவறஞ்சினி(சுவிஸ்), கிருபாகரன்(ரவி- சுவிஸ்), பிரியதர்சினி(சுவிஸ்), றஜனி(சுவிஸ்), சுதாகரன்(டென்மார்க்), தாரணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பேரின்பநாயகம்(இலங்கை), காமினி(சுவிஸ்), கமலநாதன்(சுவிஸ்), நடேசலிங்கம்(சுவிஸ்), பத்மாவதி(டென்மார்க்), வரதராஜன்(சுவிஸ்), மகேந்திரதாசன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சத்தியராணி, சண்முகதாஸ், புஸ்பம், கமலாதேவி(இலங்கை), கலைவாணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கருணாநிதி(சுவிஸ்), ரவிச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், ஆதிஸ் ஜெயின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment