யாழ். மானிப்பாய் மேற்கு எழுமுள்ளியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்ச்சி தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சோமசுந்தரம் அரியரட்ணம்(புகையிரத நிலைய அதிபர்- Station Master) அவர்களின் அன்பு மனைவியும், கங்காதேவி(கங்கா- லண்டன்), சிறினிசங்கர்(ராசன்- ஜேர்மனி), கிருஸ்ணதாசன்(கிருஸ்ணா- கனடா), காலஞ்சென்ற ரவிச்சந்திரன் மற்றும் கெளசலாதேவி(சலா- கனடா), பிறேமலாதேவி(மாலா- கனடா), தேவப்பிரியன்(தேவா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற தர்மராஜா, சக்திதேவி, கமலாதேவி, சிவபாதராஜா, சுரேஸ்குமார், அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான விஜயநாதன், சதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற லீலாவதி, விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும், விஜயந்தினி, சிறிஸ்காந்தா, கலாதேவி, சரவணபவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும், உமாவதி- லோகதாசன், கிரிதரன்- சுதா, உஷா- ஜெனதன், விதுஷன், நிரோஷன்- மாதங்கி, விபிஷன், தனுஷன், ரஜிதன், துவாரஷா, அபிஷா, லூகிஷா, சுலக்ஷா, சுலக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், லக்ஸலா- சசிதரன், லக்ஸ்மன், லக்சனா, யஷ்வினி, யஷ்வந், வைஷ்ணவன், வைஷ்ணவி, விஷ்ணுயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும், மித்திரன் அவர்களின் கொள்ளுப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment