யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை லோறன்ஸ் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யாக்கோபு, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும், கெலன்(வேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், செரிபீம், வின்கோல்ட் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜேக்கப், ஞானபிரகாசம், பெர்னான்டோ, அன்னம்மா, பிரான்சிஸ்கா, ஜேசுதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், டயானி, றேகா ஆகியோரின் அருமை மாமனாரும், லூர்த்தம்மா, றீற்ரா, தெரன்சியா, ஜேசுரட்ணம், அலோசியஸ், வசந்தி, றெஜீனா, செபஸ்ரியாம்பிள்ளை, வெஸ்மன், தொபியாஸ், டெஸ்மன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், டில்ஷான், அபிஷேக் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment