மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வாழ்விடமாகவும் கொண்ட பத்தக்குட்டி கைலாசபிள்ளை அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று Sydney இல் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், பிரபாகரன்(அவுஸ்திரேலியா), கெளசலா(ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலா(அவுஸ்திரேலியா), சிவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயலக்சுமி, ராஜேந்திரா, சந்திரகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், கணேசபிள்ளை, சந்திரசேகரம் ஆகியோரின் அருமை சகோதரரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், பிரஷான், சத்துருக்கன்- சீமா, யதுர்சி- சாம், ஆர்த்தி- ரிச்சர்ட், சந்தியா, கவின், ஹரிணி ஆகியோரின் செல்லப் பாட்டனும், அலானா, காவியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment