யாழ். நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் அவர்கள்
11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் மரியம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், மதுராங்கனி, தர்சிகா, கலிஸ்ரா, லீயோ ஆகியோரின் பாசமிகு தாயாரும், வேணுகுமார், கமலராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், யோன் பப்ரிஸ்(பேபி), மனோகரன்(ராசா), காலஞ்சென்ற அருள்நேசன்(றஞ்சன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும், தேவி, கலா, தனஞ்செயன் ஆகியோரின் அன்பு அண்ணியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, அருளப்பு யோசப், கிறிஸ்ரோப்பர் மற்றும் யுவக்கீன்(கொழும்பு) ஆகியோரின் ஆசை மருமகளும், ஆர்த்திகா, தமிழ்ச் செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment