யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், பளை புலோப்பளை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை கந்தசாமி அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னதங்கம், இலட்சுமி மற்றும் பேரம்பலம், இராசமணி, பூமணி, தர்மலிங்கம், நல்லம்மா, இராசாத்தி, பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாசன்(கனடா), விஜயறூபன்(பிரான்ஸ்), சுதாஸ்கரன், குகதர்சினி, தமிழமுதன், காலஞ்சென்ற சுவிதா, லக்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(கனடா), வான்மதி(பிரான்ஸ்), றோசி, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிலன், றகிலன், அக்ஷயன், வர்சிகா, சங்கீர்த்தனா, கிருஸ்ணிகா, தேனுகா, தமிழ்நிலன், டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
அனல் கக்கி எரியுதையாஎங்கள் அப்பாவே
உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கேநீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்உருக்குலைந்து மாய்கின்றோம்
நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளைஓங்கி ஒலிக்கிறது உம் குரல் எம் காதுகளில்
விழுகின்றதே நெஞ்சம் வாட்டுகிறதேவேதனை கனத்த இதயத்தோடு
கண்ணீர் அஞ்சலி
காணிக்கையாகட்டும்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment