யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி இலக்குமணபிள்ளை அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இலக்குமணபிள்ளை(மணி- M.M.P பிரபல வர்த்தகர், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
கனடாவை சேர்ந்தவர்களான வினோத், கோபிநாத், ஷோபனா, ஸ்ரீநாத், சினேகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுசியா, நிவேதிதா, குகதரன், அபினயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பூங்கோதை(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் பிரியமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தேவா(கனடா), சாந்தினி(சுவிஸ்), சந்திரகுமார்(சுவிஸ்), அருட்செல்வி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்), ராசமணி(கல்மடு- இலங்கை), யோகலக்ஷ்மி(ஜேர்மனி), சிரோன்மணி(சுவிஸ்), புஷ்பம்(ஜேர்மனி), செல்வன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யாமிலன், யதுன், பிரஜின், அத்வின், ஆர்யன் ஆகியோரின் பிரியமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment