யாழ். ஊர்காவற்துறை Camp Road ஐப் பிறப்பிடமாகவும், உடுவில் மல்வம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் வேதநாயகம் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் திரேசம்மாள் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான மனுவல் சரவணை அருளம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், பரலோகராக்கினி அவர்களின் பாசமிகு கணவரும், சுனித்தா(ஜேர்மனி), அன்ரனிராஜ்(கனடா), யூட்ராஜ்(பிரான்ஸ்), சுவிந்தா(பிரான்ஸ்), சுவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்ரனிசுரேஸ்(ஜேர்மனி), தங்கேஸ்வரி(பாமா- கனடா), சர்மிளா(பிரான்ஸ்), ஜெபராஜ்(பிரான்ஸ்), ஜெயபிரகாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அந்தோனியாப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை, ஜோசேப்பினா(இலங்கை), றஞ்சிதம்(ஜேர்மனி), பொன்றோஸ்(இலங்கை), ஜோர்ச்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற அருமைத்துரை, சந்திரராசா, மரியராசா(ஜேர்மனி), இராசேந்திரம், அன்னம்மா, வசந்தாமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜோயல், றெபேக்கா, ஜொசியா, ஆரோன், ஜபிரியோன், எய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment