யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி மகேந்திரன் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி தினகரன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், தியாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அஜந்தரூபன் அவர்களின் பாசமிகு தந்தையும், ஷாமினி அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இராசேந்திரன், அருமைநாயகி மற்றும் மாணிக்கவாசர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சறோயினிதேவி மற்றும் சத்தியலஷ்மி, குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஜீஷ், அரூஷ், அன்ஷிகா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment