யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பத்மகாந்தன் அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனகசபை செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தன் அவர்களின் அருமைத் தந்தையும், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற பரிமளகாந்தன், தேவகாந்தன், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புத் தம்பியும், பத்மாசனி, சோதிநாயகி, சாந்தினி ஆகியோரின் அன்பு அண்ணனும்,
இராசலட்சுமி, கமலநாயகி, தனலட்சுமி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவஞானலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment