யாழ். நாரந்தனை ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி றீற்றா பாலேந்திரா அவர்கள் 15-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும்,றஞ்சினி, ரமேஷ், ராஜன், றூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான மேரி யோசேப்பின், பீற்றர் மரியநாயகம் மற்றும் மேரி மாகிறற் அலிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அன்ரன், விஜி, ஜெனற், பாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிரூஜன், ஸ்ரெபனி, றெமோ, றெகான், டியோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று Western Funeral Parlour, Negombo மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் தோப்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment