யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று கைல்புறே கந்தன் திருவடியில் சரணடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் ஆருயிர் மூத்த புதல்வரும், சின்னத்தம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் இதய துணைவரும்,மௌனிகா, பௌசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,சிவான் அவர்களின் ஆசைப் பேரனும்,தவமணி(கனடா), மனோன்மணி(சுவிஸ்), புஸ்பமலர்(கைதடி), செல்வரத்தினம்(கொவென்றி), குணரத்தினம்(இல்பேர்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,நாகேஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற சின்னம்மா, கிருஷ்ணபிள்ளை, நடராஜா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment