யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேதசுந்தரம் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கட்டுவனைச் சேர்ந்த நல்லதம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,உமா(லண்டன், Catford), அரவிந்தன்(லண்டன், Blackheath) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அல்பிரட் செல்வராஜா, கலைமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகலிங்கம் மற்றும் அரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மீரா, ஜவாகர், கீரன் மற்றும் ரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment